2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ரயில் நிலையம் முன்பாக பரபரப்பு ; பலவந்தமாக கூடாரங்கள் அகற்றப்பட்டன

Nirosh   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து, அதில் கையெழுத்திடும் ​தொழிற்சங்கங்களையும் விலக வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து, மலையகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை, கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக, நேற்று (18) ஆரம்பித்தனர்.

இந்நிலையில் குறித்த போராட்டம் இன்றும்(19) தொடரும் நிலையில், அதில் கலந்துகொண்ட மேலும் சில மலையக இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் குறித்த போராட்டத்துக்கு தங்களது ஆதரவை வழங்கி வரும் நிலையில், ரயில் நிலைய திணைக்கள அதிகாரிகள் பலவந்தமாக, போராட்டக்காரர்களது கூடாரங்களை அகற்றியுள்ளனர். இதனால் குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் நாளை முதல் குறித்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .