2025 மே 21, புதன்கிழமை

ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Kanagaraj   / 2015 நவம்பர் 24 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவிருப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

2016 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில், மொத்தத் தேசிய  உற்பத்தியில் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் பிழையான புள்ளவிவரங்களைச் சமர்ப்பித்து, மக்களையும் நாட்டையும் ஏமாற்றியுள்ளார் என்று குற்றஞ்சாட்டியே, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரவிருப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

வரவு- செலவுத்திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்தாலும், எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையை கொண்டுவரவிருப்பதாக அக்கட்சிகள் அறிவித்துள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X