Kogilavani / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மூவரின்றி விசாரணைக்கு எடுத்துகொள்ள கொழும்பு மேலதிக நீதவான் தீர்மானித்துள்ளது. எழுவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மூவருக்கு எதிராக ஏற்கெனவே பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, அந்த மூவருமின்றி இந்த வழக்கு, எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என்று, கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெர்ணான்டோ, கட்டளையிட்டார்.
அத்துடன், ஏனைய நான்கு சந்தேகநபர்களையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடற்படை உறுப்பினர்கள் மூவர், பொலிஸ் அதிகாரி மற்றும் கருணா செயற்பாட்டு குழுவின் உறுப்பினர் இருவருக்கு எதிராகவே, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து கடற்படை வீரர்களுக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு, சட்டமா அதிபருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம், ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இதனடிப்படையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி, நடராஜா ரவிராஜ், கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில், கடற்படை வீரர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
15 minute ago
26 minute ago
33 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
33 minute ago
52 minute ago