2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’ரவியை சந்தேகநபராக்குவது சட்டவிரோதமானது’

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் முன்னால், போலி சாட்சியங்களை வழங்கியதாகக் கூறி, இரகசியப் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவைச் சந்தேநபராக அறிவிப்பது, தற்போதைய சூழ்நிலையில் சட்டவிரோதமானதென, கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க, இன்று (08) அறிவித்தார்.

இலங்கைத் தண்டனைக் கோவைச் சட்டத்தின் பிரகாரம், இவ்விவகாரத்தில் வழக்கு விசாரணையொன்று ஆரம்பிக்கப்படவில்லை என்றும் இதனால், ரவி கருணாநாயக்கவைச் சந்தேகநபராக அறிவிப்பது தொடர்பில், இரகசியப் பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்றும், நீதவான் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .