Janu / 2025 மே 25 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவன் வெள்ளிக்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் சிங்கள மாணவர்களுக்கிடையே, புதிதாக பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களை பகிடிவதை செய்வது தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது மாணவி ஒருவர்,“ ராங்கிங் செய்ய வேண்டாம்” என தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த மாணவியின் கன்னத்தில் சக மாணவன் ஒருவன் தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மாணவியை தாக்கிய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
கனகராசா சரவணன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .