2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ராஜகிரியவில் பதற்றம் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

ராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளத்தின் முன்பாக பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு ஒப்பந்தம் இன்று (28) கைச்சாத்திடப்படுவதை முன்னிட்டு, அதற்கு எதிர்புத் தெரிவித்து தொழிலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்களுக்கும், முதலாளிமார் சம்மேளன அதிகாரிகளுக்கும்  இடையில் இடம்பெற்ற கருத்து மோதல்களால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதனையடுத்து, குறித்த இடத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .