2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ராஜித விவகாரம்: பணிப்பாளர் நாயகத்துக்கு நோட்டீஸ்

Editorial   / 2025 ஜூலை 14 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்வது தொடர்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியங்களை வழங்குமாறு கொழும்பு பிரதான  நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான   ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு, திங்கட்கிழமை (14)  நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டால், முன் பிணை  கோரி ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த பிணை மனுவை பரிசீலித்த பின்னர் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மீன்பிடித் துறைக்கு சிறந்த சேவையை வழங்கிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சிவில் விவகாரம் தொடர்பாக கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சந்தேகநபர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன தெரிவித்தார்.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தை சுத்தம் செய்வது தொடர்பான ஒரு விஷயத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாகவும், மணல் அகழ்வாராய்ச்சி இயந்திரத்தைப் பயன்படுத்தி கிரிந்த மீன்பிடி துறைமுகத்தை சுத்தம் செய்த பிறகு சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனம் பணம் செலுத்தாதது தொடர்பாக கொழும்பு வணிக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

சிவில் விவகாரத்தின் அடிப்படையில் வழக்கு நிலுவையில் உள்ள ஒரு சம்பவம் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நிரபராதியைக் கைது செய்யத் தயாராகி வருவதால், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு  நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் அவர் கோரினார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட பிரதான  நீதவான், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை    ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி, சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தனது விளக்கத்தை முன்வைக்க உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .