2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிக்கு ஒரு மாதம் பரோல்

Editorial   / 2019 நவம்பர் 26 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் ரொபர்ட் பயாஸ் தனது மகனின் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோலில் சென்றார்.

ரொபர்ட் பயாஸ், தனது மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை செய்ய பரோல் வழங்க கோரி சென்னை உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் சுந்தரே‌‌ஷ், ஆர்.எம்.டி. டிக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு அந்த மனு மீது விசாரணை நடத்தியது. 

பின்னர், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது. அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் நேற்று (25) முதல் டிசெம்பர் 24ஆம் திகதி வரை ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று (25) ரொபர்ட் பயாஸ், புழல் சிறையில் இருந்து பரோலில் சென்றார். கடும் பொலிஸ் பாதுகாப்புடன் தனி வேன் மூலம் அவர், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வழக்கறிஞர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .