2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

’ ரிஷாட்டுக்காக உயிரையும் கொடுப்பேன்’

Editorial   / 2020 ஜூலை 18 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(.எல்.எம்.ஷினாஸ்)   

ரிஷாட் பதியூதீன் எனும் தலைமைக்காக உயிரைக் கொடுப்பதற்கும் தயாராக இருக்கின்றோம் என திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கே.எம்.அப்துல் றஸாக் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸின் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

2020 நாடாளுமன்ற தேர்தலை வரலாற்றை புதுப்பிக்க போகும் தேர்தலாக பார்க்க வேண்டியது அவசியமெனவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்காக திகாமடுல்லை மக்கள்ளை குடும்பத்தாருடன் இணைந்து பிராத்தனை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

 ரிஷாட் பதியூதீனை கைது செய்தால் சிங்கள மக்களின் வாக்குகளை பெருமளவில் பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கம் நினைப்பதாகவும்,  அவரை போன்ற தலைவரை இழக்க முடியாதென்பதால் அவருக்காக உயிரை கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .