2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ருஹுணு பல்கலைக்கழகப் பாதுகாப்புக்கு இராணுவம்

Editorial   / 2019 ஜூலை 10 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் எற்பட்ட மோதலையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு நேற்று (09) மோதலில் முடிவடைந்த நிலையிலேயே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் காயதடைந்த 10 மாணவர்கள் மற்றும் ஒரு கல்விசாரா ஊழியரும் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் மாத்தறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .