2024 மே 02, வியாழக்கிழமை

ரூ.1,900 கொத்துரொட்டி வர்த்தகருக்கு பிணை

Editorial   / 2024 ஏப்ரல் 17 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் உள்ள  வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்க வந்த   வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்ட  உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான்  நீதிமன்றம் புதன்கிழமை (17) உத்தரவிட்டது.

இதன்படி சந்தேக நபர் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முந்திய செய்தி

கொழும்பு, வாழைத்தோட்டம் புதுக்கடை பிரதேசத்தின் வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை  தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் ஒருவர் வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டவர் ஒரு கொத்து ரொட்டியின் விலையைக் கேட்டபோது, ​​ கடைக்காரர் 1900 ரூபாய் என்று கூறினார். வெளிநாட்டவர் அதை வாங்க மறுத்துவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வலுவாகப் பரவி வருகிறது. காணொளியின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .