2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ரூ. 2,500 மில். செலவில் அம்பியூலன்ஸ் வண்டிகள் விநியோகம்

Editorial   / 2019 ஜனவரி 16 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடுபூராகவுமுள்ள 132 வைத்தியசாலைகளுக்கு அம்பியுலன்ஸ் வண்டிகள் வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2500 மில்லியன் ரூபாய் செலவில் 132 அம்பியூலன்ஸ் வண்டிகள் இவ்வாறு வழங்கப்படவுள்ளதெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாண சபைகளின் கீழ் இயங்கும் 103 வைத்தியசாலைகளுக்கும் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் 27 வைத்தியசாலைகளுக்கும் 2 ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்குமே குறித்த அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவுள்ளன.

இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அம்பியூலன்ஸ் வண்டிகள் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வைத்தியசாலைகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .