2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ரூ.5,000 போலி தாள்களுடன் இருவர் கைது

Editorial   / 2023 பெப்ரவரி 09 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

அக்கரைப்பற்றில் அப்பிள் கடை ஒன்றில்  ஜயாயிரம் ரூபாய் போலி நாணையத்தாளை வழங்கி அப்பில் வாங்க முயற்சித்த அட்டாளைச்சேனையைச் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உட்பட இருவரை இன்று (09) வியாழக்கிழமை  கைது செய்யப்பட்டதுடன்   ஜயாயிரம் ரூபா போலி நானையத்தாள்கள் மூன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

 பல்கலைக்கழகம் ஒன்றில் கல்விகற்றுவரும் அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவன் அவரின் 24 வயதுடைய நண்பனுடன் சம்பவதினமான இன்று பகல் அக்கரைப்பற்று கல்முனை வீதியிலுள்ள ஜூம்மா பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள அப்பில் கடைக்கு சென்று அப்பிளை வாங்கிவிட்டு 5 ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து கடை உரிமையாளர் இது போலியான தாள் என்பதையறிந்து உடனடியாக பல்கலைக்கழக மாணவனை மடக்கிபிடித்து பொலிஸாரி்ம் ஒப்படைத்தார்.  அவருடன் வந்த நண்பன் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அவரை பொலிஸார் கைது செய்தனர்

இதில், கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனிடம் இருந்து மேலும் இரு 5 ஆயிரம் ரூபாய் போலி தாள்கள் மீட்கப்பட்டன.

விசாரணையின் பின்னர் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X