2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ரூ.5,000 போலி நாணயத்தாள்கள் 145 உடன் நால்வர் கைது

Editorial   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரத்தின் மதவாச்சி பகுதியில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களின் நூற்று நாற்பத்தைந்து தாள்கள் மற்றும் அவற்றை அச்சிடப் பயன்படுத்தப்படும் பல மடிக்கணினிகள், கணினிகள் மற்றும் பிற உபகரணங்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபரணை பகுதியில் 5,000 ரூபாய் நாணயத்தாள் புழக்கத்தில் இருப்பது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிமதட மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்  இந்த மோசடியில் ஈடுபட்ட மற்ற சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்ததாக இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹபரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தேக நபர்கள் மதவாச்சி பகுதியில் போலியான  நாணயத்தாள்களை அச்சிட்டு, ஹபரணை பகுதிக்கு வந்து அவற்றை மாற்றிக் கொண்டதாகவும், இந்த மோசடி நீண்ட காலமாக நடந்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X