2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு சென்ற ஹிருணிகா

Editorial   / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் செய்திகள் வெளியிட்டதைப் போன்றே அரச ஊடகங்கள் செய்திகளை வெளியிடுமாறு கோரிக்கை விடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குச் சென்றிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமசந்ர, மாரசிங்க, அலவத்துவல ஆகியோர் இன்று காலை தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்துக்குச் சென்று, அதன் தலைவரை சந்திக்க முயற்சித்துள்ளனர்.

எனினும் தலைவர் இல்லாத காரணத்தால் ஊடக அமைச்சின் செயலாளரிடம் இந்த விடயம் குறித்து வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் குறித்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்ற பின்னர், ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அங்கு விசேட பாதுகாப்பு படையணியினர் அழைக்கப்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .