2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ரெப்பிட் பீசிஆர் இயந்திர கொள்வனவில் தாமதம் என குற்றச்சாட்டு

J.A. George   / 2021 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சு விரைவாக ரெப்பிட் பீசிஆர் பரிசோதனை இயந்திரங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என வைத்திய ஆய்வுக்கூட பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் நிறைவுபெற்ற விலைமனுகோரல் செயற்பாட்டை இன்னும் தாமதப்படுத்தி இந்த இயந்திரங்களை கொள்வனவு செய்வதை சுகாதார அமைச்சு தாமதப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்கு நெருங்கிய ஒரு தரப்பு இலாபகரமான விதத்தில் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வதற்காக இவ்வாறு தாமதப்படுத்தப்பட்டுள்ளதா என விசாரணை நடத்துமாறு வைத்திய ஆய்வுக்கூட பரிசோதகர்கள் சங்கம், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X