2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

ரோஹிதவின் ஹோட்டல் விவகாரம் அம்பலம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான சொகுசு ஹோட்டலுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து, கொலன்ன பொலிஸாரால் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கராஜ வனத்துக்கு அருகாமையில் எம்பிலிப்பிட்டிய பகுதியிலுள்ள கொலன்ன பிரதேசத்தில் அமைந்துள்ள,  'கிரீன் எகோ லொட்ஜ்' ஹோட்டலில், கடந்த மே மாதம் 10 திகதி பொருட்கள் திருடப்பட்டு தீ வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் திங்கள் (22) மற்றும் செவ்வாய்க்கிழமை (23), 25 மற்றும் 50 வயதுடைய கொலன்ன பிரதேசத்சைச் சேர்ந்த சந்தேகநபர்கள் 4 பேர் கைது செய்ய்ப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

மே 10 அன்று இடம்பெற்ற களேபரங்களின் போது, சொகுசு ஹோட்டல் தீக்கிரையாக்கப்பட்ட பின்னர், அந்த ஹோட்டல் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவருக்கு சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகின. 

அந்த ஹோட்டல் யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதனை அவர் நிராகரித்திருந்தார்.

அதன்பின்னர், மஹிந்தவின் மூன்றாவது மகனான ரோஹித ராஜபக்ஷவுக்கு குறித்த ஹோட்டல் சொந்தமானது என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இதன்மூலம் எந்த பதவியையும் வகிக்காத ரோஹிதவுக்கு ஹோட்டல் இருப்பது இந்த விசாரணை மூலம் வெளிவந்துள்ளது.

தீ வைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கொலன்ன பொலிஸார் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X