2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

றகர் வீரரைப் பலியெடுத்த விபத்துக் குறித்து விசாரணை

Editorial   / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

றகர் வீரரொருவரின் மரணத்துக்குக் காரணமாக அமைந்த, மின்தூக்கி விபத்துக்கான காரணமெதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லையெனத் தெரிவித்த பொலிஸார், தொழில்நுட்ப அறிக்கையைப் பெற்று முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

கொம்பனிவீதி, நவம் மாவத்தையிலுள்ள இரவு விடுதியிருக்கும், கட்டடத்திலுள்ள மின்தூக்கி, ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை 2 மணியளவில் விபத்துக்குள்ளானதில், றகர் வீரரான கோகில சமந்தபெரும என்ற 24 வயது இளைஞன் மரணமடைந்தார்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் 12 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் சி.சி.ரி.வி கமெராக்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

சம்பவம் தொடர்பில் கோட்டை நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்த மின்தூக்கி விபத்துக்குள்ளானமைக்கான சரியான காரணத்தைக் கண்டறிவதற்காக, தொழில்நுட்ப அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது. அதற்காக, அரச பொறியியற் கூட்டுத்தாபனத்திடம் அறிக்கையைப் பெறுவதற்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  

மார்பு குழிக்குள் ஏற்பட்டுள்ள காயங்களின் காரணமாக, மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டமையால், இந்த மரணம் சம்பவத்துள்ளதென, பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்தியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே, முழுமையான விசாரணையை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .