2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

லசந்தவின் கொலையாளி மரணம்

Menaka Mookandi   / 2016 ஒக்டோபர் 14 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக, கொலைக்குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர், அது தொடர்பான கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரே, இந்தக் கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டவராவார்.

அவர் எழுதிவைத்துள்ள கடிதத்தில், “தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் தெரிந்துகொள்வதற்காக” என்று தலைப்பிட்டுள்ளார். இக்கடிதம், அவரது காற்சட்டை பொக்கெட்டில் இருந்துள்ளது.

லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாகவும் தன்னுடைய நண்பன் மலிந்த உதலாகம, குற்றவாளி அல்ல என்றும், அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .