Editorial / 2017 ஜூன் 23 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதானையில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை, மாளிகாகந்தை நீதவான் நீதிமன்ற நீதவான் துலானி எஸ். வீரதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, ஜூலை 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவனத்துக்கு எதிரான போராட்டம், நேற்று முன்தினம் இடம்பெற்றபோது, சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .