Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் லோகன் ரத்வத்த கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிறிது நேரத்திற்கு முன்புகாலமானார் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரத்வத்த இன்று (15) பிற்பகல் காலமானார். அவர், ஈரல் தொடர்பில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதுடன், சத்திரசிகிச்சைக்கு தயாராகிகொண்டிருந்தார் என்றும் அறியமுடிகின்றது.
கண்டி மாவட்டத்தில் இருந்து அரசியலில் நுழைந்த அவர், இறக்கும் போது அவருக்கு வயது 57.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய மாகாண சபை உறுப்பினராக அரசியலில் நுழைந்த லொஹான் ரத்வத்த, பின்னர் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை வகித்தார்.
திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நெருங்கிய உறவினரான லொஹான் ரத்வத்த, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சராகவும், பின்னர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றினார்.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025