2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வெட்டுப்புள்ளிக்கு எதிராக முறைப்பாடு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி அதிகரிப்புக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆசிரியர் சேவை சங்கம், நேற்று வியாழக்கிழமை (26) முறைப்பாடு செய்துள்ளது. 

மாவட்டமட்ட வெட்டுப்புள்ளி அதிகரிப்பால் முதலாம் வினாப்பத்திரத்தில் 75 புள்ளிகள் என்ற வீதத்தில் இரு வினாப்பத்திரங்களிலும் 150 புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள் சித்தியடையாதவர்களாகி உள்ளனர் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

ஆகையினால், கடந்த ஆண்டைப்போல மாவட்ட மட்டத்திலான திருத்த வெட்டுப்புள்ளிகளை இம்முறையும் அமுல்படுத்துமாறு அச்சங்கம் கூறியுள்ளது. 

புலமைப்பரிசில் பரீட்சையில் 2014ஆம் ஆண்டு சித்தியடைந்தோர் என்ணிக்கை 51,152 ஆகும். எனினும், 2015ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 31,853 ஆக குறைந்துள்ளது. ஆகையால், வெட்டுப்புள்ளிகளில் திருத்தங்களை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கு வழிசமைக்குமாறும் அச்சங்கம் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .