2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வெத ஆராச்சி மீது நம்பிக்கை இல்லை

Thipaan   / 2016 பெப்ரவரி 01 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி அவருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகின்றார். அதை என்னிடம் சொல்லி வேலையில்லை. அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்றால் அவர் நம்பிக்கையானவராக இருக்க வேண்டும். அவர் மீது நம்பிக்கை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

அத்துடன், வரையறுக்கப்பட்ட அதிகாரங்களையே தன்னால் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சிக்கு கொடுக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார். அங்குனுபெலஸவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அமரவீர மேலும் கூறுகையில், வேறு இராஜாங்க அமைச்சர் வேண்டுமென்று பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் நான் கேட்டதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் குற்றமொன்றை சுமத்துகின்றார்.

நான் அவருக்குத் தேவையான அளவை விட அதிக வாகனங்களை கொடுத்துள்ளேன், தேவையான அதிகாரிகளை வழங்கியுள்ளேன், தனிப்பட்ட ரீதியிலும் உதவி செய்துள்ளேன்.

எனக்கு இதை விடுத்து நெடுஞ்சாலைகள் அமைச்சுப் பொறுப்புக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் யோஷித ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் தான் கவலையடைவதாகவும், தனது தந்தை காலம் முதல், ராஜபக்ஷ குடும்பத்துடன் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X