2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வீதி ஒழுங்குவிதி மீறல் தண்டம்: தீர்வு வழங்காவிடில் நாடு தழுவிய போராட்டம்

Kogilavani   / 2016 நவம்பர் 17 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து ஒழுங்குவிதி மீறல்களுக்கான குறைந்தபட்சத் தண்டத்தை 2,500 ரூபாயாக உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முடிவு தொடர்பாக, உரிய தீர்வை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வழங்காவிடில்,

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் சங்கம் எச்சரித்துள்ளது.  

குறைந்தபட்சத் தண்டம் அதிகரிப்புத் தொடர்பாக, நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அச்சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார, வரவு - செலவுத் திட்டத்தில் நிதியமைச்சரால் பிரேரிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சத் தண்டப்பண அதிகரிப்பை, சங்கத்துடன் மேற்கொள்ளும் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்றார்.  
“குறைந்தபட்சத் தண்டத்தை, 20 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்துவது, நியாயமற்றது. ஒரு குற்றத்துக்கான தண்டம், இந்தளவுக்குக்கு அதிகரிக்கப்படுமாயின், ஏனைய குற்றங்களுக்கு எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பதை நாம் உணரலாம்” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “பஸ் சாரதிகள் மாத்திரம் தான், வீதிகளில் உயிரிழப்பை ஏற்படுத்துபவர்கள் அல்லர். அவர்கள் அவ்வாறு உயிர்களைப் பறித்தால், தற்போதைய வீதிகளின் நிலைமையாலேயே ஆகும். வேலைநிறுத்தத்தின் பின்னர், எமக்குக் கலந்துரையாடல் தேவையற்றது. கெமுனு விஜேரத்னவின் பஸ் சங்கம் போன்று, எங்களுடைய சங்கம், முடிவுகளை எடுப்பதில்லை. கலந்துரையாடல்களின் பின்னரே, நாம் முடிவுகளை எடுப்போம்” என்று அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .