2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வீதி நெரிசல் கட்டணத்தை அறவிட உத்தரவு

Kanagaraj   / 2016 ஜூன் 02 , மு.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூலை மாதம் மேற்கொள்ளவிருக்கின்ற வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தின் போது, வீதிநெரிசல் கட்டணத்தையும், பயணிகளிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

மருதானையில் உள்ள சி.எஸ்.ஆர் மண்டபத்தில் நேற்றுப் புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்படும் போது, தனியார் பஸ்களில், எரிபொருட்களின் செலவு 27 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரையிலும் அதிகரித்துள்ளது. ஆகையால், வீதி நெரிசல் கட்டணத்தை, பயணிகளிடமிருந்தே அறவிடவேண்டும். அவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அனுமதியளிக்காவிடின், வேலைநிறுத்தப் போராட்டத்தில் கட்டாயம் குதிப்போம் என்றும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .