2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வெனிசுவெல நாட்டுப் பெண்ணின் வயிற்றிலிருந்து கொக்கெய்ன் மீட்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவெல நாட்டுப் பெண்ணின் வயிற்றிலிருந்து, 18 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் கொண்ட 87 பக்கெட்டுக்கள் எடுக்கப்பட்டதாக சுங்க ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்

இந்தப் பெண் இலங்கைக்குள் கொக்கெய்ன் கடத்த முயன்றபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் அதிகாரிகளினால் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

இவர் 1,200 கிராம் கொக்கெய்ன் கொண்ட 87 பக்கெட்டுக்களை விழுங்கியிருந்தார்.

எமிரேட்ஸ் விமானமொன்றில் பிறேசிலிலிருந்து டுபாய் வழியாக வந்த இவர்,தான் பக்கெட்டுக்களை விழுங்கியிருப்பதை ஏற்றுக்கொண்டார்.

இவர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டப் பின்னர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறை மற்றும் சுங்க அதிகாரிகளின் மேற்பார்வையில் போதைப்பொருள் பக்கெட்டுக்கள் வெளியே எடுக்கப்பட்டன.

இந்தப் பெண் 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்தப் பெண்ணை பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக லெஸ்லி காமினி தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X