2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

George   / 2016 ஜூன் 03 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை, நவம்பர் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அல் ஹூசைன், கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வந்தபோது, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என கறுவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தனர்.

அதனையடுத்து, வழக்கு நவம்பர் 25ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .