2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

விரைவில் விமல் கைது?

Kogilavani   / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக, அவரது கட்சி, சந்தேகம் வெளியிட்டுள்ளது.

தற்போது தயாரிக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பை மிக எளிதில் நிறைவேற்றிக்

கொள்வதற்காகவே, அரசாங்கம் இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளதென, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரான மொஹமட்   முஸம்மில் தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (13), அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, ஆசி பெற்றுக்கொண்டனர். இதன்போதே, மொஹம்மட்  முஸம்மிலினால், மேற்படி தகவல், மகாநாயக்கத் தேரர்களுக்கு வழங்கப்பட்டது. கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வைத்து, அஸ்கிரி மகாநாயக்கத் தேரர் அதி வணக்கத்துக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்த அவர்கள், பின்னர், மல்வத்து பீடத்தின் மகாநாயக்கத் தேரர் அதி. வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரையும் சந்தித்து ஆசி பெற்றதுடன், நாட்டின் தற்போதைய நிலவரம், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள முஸம்மில், 'வீமல் வீரவன்ச போன்று, ஒன்றிணைந்த எதிரணியின் முக்கியஸ்தர்கள் சிலரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையொன்றை, அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அவர்களைக் கைது செய்வதால், அரசியலமைப்புத் திருத்தத்தை இலகுவாக நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று, இந்த அரசாங்கம் கணக்கிட்டுள்ளது' என்று விளக்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X