Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 மே 20 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நேற்று முன்தினம் 18ஆம் திகதியுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இராணுவ வெற்றியைக் கொண்டாடும் நோக்கிலும், இராணுவத்தினரைக் கௌரவிக்கும் நோக்கிலும், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நேற்று வியாழக்கிழமை (19), வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று, அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரைப் பார்வையிட்டனர். இதில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, உதய கம்மன்பில, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
'யுத்தத்தை முடித்துக்கொடுத்த இராணுவத்தினரை, தற்போதைய அரசாங்கம் மறந்துள்ளது. அதனாலேயே, இராணுவத்தினர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்' என்று ஒன்றிணைந்த எதிரணியினர் கூறினர்.
இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியின் ஏற்பாட்டில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குருநாகலில் „யுத்த வெற்றி விழா...நேற்று (19) நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், வானிநிலை சீர்கேடு காரணமாக, அந்நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago