2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வெள்ள நீர் வடிந்தோட சில நாட்களாகும்

Kogilavani   / 2016 மே 20 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கங்கையை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிந்தோட, சில நாட்களெடுக்கும் என்று தெரிவித்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களம், களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்பில் தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியது. களனி ஆற்றின் பெருக்கெடுப்பு காரணமாகவே தான், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கவோ அல்லது குறையவோ, மலைநாட்டில் பெய்யும் மழைவீழ்ச்சியே காரணமாக அமையும் என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வளப் பிரிவின் பணிப்பாளர் பிரேமா ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

இதேவேளை, களனி கங்கையின் நீர்மட்டம், மேலும் 1 அடியேனும் அதிகரிக்கப்படுமாயின், கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகத்துக்கு தடங்கல் ஏற்படுமென, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மேற்படி பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படும் நீர், சேற்று நிறத்துடன் கூடிய நிறத்தில் வருவதாக, பல பிரதேசங்களிலிருந்து தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகத் தெரிவித்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், அவை தொடர்பில் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாகவும் இவ்வாறான முறைப்பாடுகள் இருப்பின் 1939 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X