2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் தாழமுக்கம்

Amirthapriya   / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தற்பொழுது நிலவி கொண்டிருக்கும் மழை கொண்ட காலநிலையானது, நாளை​ முதல் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் அநேகமான பி​ரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்தார்.

இதன்படி வடக்கு, மேற்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காலை வேளைகளிலிருந்து மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதோடு, கிழக்கு , தெற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமானளவில் மழைவீழ்ச்சி பதிவாகுமென்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ​மேலும் அவர் தெரிவித்தார்.

இந்த இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்றும் பலமானதாக வீசுமென்பதால், எனவே, பொதுமக்கள் இந்த இடி மின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும“ சேதங்களை குறைத்துகொள்ளும் பொருட்டு அவதானமாக செயற்படுமாறு கோர​ப்பட்டுள்ளது.

கடற்பிராந்தியங்களை பொருத்தவரையில் கிழக்கு, வடக்கு, வடகிழக்கு கடற்பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும். அத்தோடு காற்றின் வேகமானது மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்கு அல்லது வடமேற்கு திசையிலிருந்து வீசும். இந்த காற்றானது சில சமயங்களில் பொத்துவில், காலி, அம்பாந்தோட்டை ஊடாக கொழும்பு வரையான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசுவதன் காரணத்தால், இந்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அராபிய கடற்பிராந்தியத்தில் வலுவடைந்த தாழமுக்கமானது, கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதானால், இது தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ள காரணத்தால், ஓமான் நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட “லுவான்” என்ற சூறாவளியானது, ஒமான் நாட்டின் சலசா பிரதேசத்திலிருந்து கிழக்கு, தென்கிழக்காக 1040 மீற்றர் தூரத்திலும் சொகட்டா தீவிலிருந்து கிழக்கு, தென்கிழக்காக 920 கிலோமீற்றர் தூரத்திலும் காணப்படுகின்றது.

இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஓமானின் தெற்கு பிரதேசத்துக்கும் ஜெமன் நாட்டின் கரையோர பிரதேசத்துக்கும் அடுத்து வரும் 5 நாட்களில் ஊடறுக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தாழமுக்கமானது வலுவடைந்துகொண்டு வருவதோடு, இது அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இது அடுத்த 72 மணித்தியாலங்களில் வட கிழக்காக இந்தியா – ஒரிஸா மாநிலத்தை நகருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .