2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

வசந்த முதலிகே உள்ளிட்டவர்களுக்காக இன்று 03 மனுக்கள்

J.A. George   / 2022 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துகின்றமைக்கு எதிராக 03 அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றில் இன்று சமர்பிக்க அவர்களது சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்படுவதாக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், போராட்டத்துக்கு ஆதரவளித்தவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது நியாயமற்ற செயல் எனவும் சட்டத்தரணி நுவான் போபகே சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X