Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 16 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் பிரச்சினைகளை எழுதி வைத்துப் படிப்பது என்பது சரியானது அல்ல என்று த.வெ.க. தலைவர் விஜய் மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு ஊரிலும் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை சொல்லும்போது இதயத்தில் இருந்து வரவேண்டும். அதை எழுதி வைத்துப் படிப்பது என்பது சரியானது அல்ல. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் எழுதி கொடுத்தால் கூட, மேடையில் ஏறி இதுதான் பிரச்சினை என்பதை படித்து காட்டிவிட்டு சென்றுவிடுவாரே.
தி.மு.க, அ.தி.மு.கவை விட த.வெ.க. தலைவர் விஜய்யை எதிர்ப்பதையே நான் மும்முரம் காட்டுவதாக சொல்கின்றனர். தி.மு.கவை நிறுவியவர் அண்ணா. அ.தி.மு.கவை நிறுவியவர் எம்.ஜி.ஆர். விஜய் இவர்கள் இருவரையும் சேர்த்து தூக்கிக் கொண்டு வருகிறார். இருவரின் படத்தை மேடையில் வைத்துவிட்டால் மட்டும் போதுமா?
அண்ணா மீது எனக்கு பெருமதிப்பு உண்டு. அவரது ஆட்சியில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. அண்ணா அரசியலுக்கு வந்த பிறகு தான் தமிழரின் வரலாறு, இலக்கியம் எல்லாம் அரசியல் மேடையில் பேசப்பட்டது. அந்தப் பெருமை அண்ணாவையே சேரும். அவரை பற்றி ஒரு அரை மணி நேரமாவது பேச வேண்டாமா?
இலங்கை தமிழர் விடுதலைக்கு உதவிய எம்.ஜிஆரை போற்றுகிறோம். அதேநேரம்ம் தமிழகத்தில் கல்வியை, மருத்துவத்தை தனியார் மயப்படுத்தியது, தமிழில் இருந்து ஆங்கிலத்தை பயிற்று மொழியாக மாற்றியது, முல்லை பெரியாறு அணையை கேரளாவுக்கு தாரைவார்த்தது எல்லாமே எம்.ஜி.ஆர். தானே. அதை ஏற்க முடியுமா?
இதைப் பற்றியும் விஜய் பேச வேண்டும் அல்லவா? நானும் சினிமாவில் இருந்துதான் வந்திருக்கிறேன். ஆனால், களத்தில் நான் மக்களை சந்திக்கிறேன். அவர் ரசிகர்களை சந்திக்கிறார் என்று சீமான் கூறினார். (a)
43 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago