2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய பெண்

Editorial   / 2025 ஒக்டோபர் 28 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. இந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இதையடுத்து, நடிகரும் தவெக தலைவருமான விஜய் மிகுந்த வேதனையுடன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார்.

சம்பவம் குறித்து விஜய் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்ததுடன், பலியான 41 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு செய்தார். இந்த தொகை நேரடியாக வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. மேலும், அவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து, தனிப்பட்ட முறையில் ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களில் ஒருவராக கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவியான சங்கவி, விஜய் அளித்த ரூ. 20 லட்சத்தை திருப்பி அனுப்பியதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது; கரூர் நெரிசலில் என் கணவன் ரமேஷ் உயிரிழந்தார். விஜய் நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்பதால் பணத்தை திருப்பி அளித்ததாகவும், பணம் வேண்டாம் ஆறுதல் மட்டுமே வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தனக்கு தெரியாமல் தனது உறவினர்களை தவெக நிர்வாகிகள் அழைத்து சென்று இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சங்கவி என்ற பெண் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .