2026 ஜனவரி 29, வியாழக்கிழமை

வீடு எரிந்ததில் முதியவர் கருகி பலி

Editorial   / 2026 ஜனவரி 29 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வேயாங்கொடை - பத்தலகெதர பகுதியில், வீடொன்றில் வியாழக்கிழமை (29) அன்று அதிகாலையில் பரவிய தீயில் சிக்குண்டு 73 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார்.

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மொரட்டுவத்த, பத்தலகெதர பகுதியைச் சேர்ந்த முதியவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

தீ பரவல் ஏற்பட்டபோது முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளதாகவும், தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X