2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வட்டாரமுறையில் தேர்தலை நடத்துவதில் சிக்கல்

Kanagaraj   / 2015 நவம்பர் 30 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் வட்டாரங்களை உருவாக்குவது தொடர்பில் ஆராயவென நியமிக்கப்பட்ட குழுவின் பணி, அதிவிரைவாக முடியாது விடின், அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, அடுத்தவருடம் மார்ச் மாதம் நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக தெரியவருகிறது. உள்ளூராட்சி அமைச்சால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு, தனது பொறுப்பை செய்து முடிப்பதற்கு ஜனவரி 11 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த அவகாசம் முடிவதற்கு இடையில், இந்த வேலையை முடிக்காது விடின் மார்ச்சில் தேர்தல் நடத்தமுடியாதென தெரியவந்துள்ளது. புதிய தேர்தல் முறைப்படி, தேர்தல் வட்டாரம் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக கட்சிகளிடமிருந்து வேட்பாளர் நியமனம் பெறப்படும். ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்குகள் எண்ணப்படும்.

இதற்கு நீண்டகாலம் தேவைப்படும். எனவே, ஜனவரி 31 அளவில் வட்டாரம் அமைப்பு வேலைகள் முடியாது விடின், மார்ச்சில் தேர்தலை நடத்தமுடியாது.

இந்தத் தேர்தலுக்காக 4,900 வட்டாரங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றுள் சில, பல் அங்கத்தவர் வட்டாரங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X