2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஜூனில் ஆரம்பம்

Gavitha   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள், எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்தார்.

இந்த நெடுஞ்சாலையின், கடவத்தையில் இருந்து மீரிகம வரையான பகுதியை சீன நிறுவனமொன்றும், மீரிகமயிலிருந்து பொத்துஹெர வரையான பகுதியை ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிர்மாணிக்கவுள்ளன.

பொத்துஹெரவில் இருந்து கலகெதர வரையான பகுதியை நிர்மாணிக்கும் பொறுப்பு உள்நாட்டு நிறுவனங்களிடம் கையளிக்கவுள்ளதாகவும் கலகெதரவில் இருந்து தம்புளை வரையான பகுதியை யார் நிர்மாணிக்கப் போகிறார்கள் என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றும் அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் நலின் பண்டார எம்.பி மேலும் கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X