2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு ரயில் மார்க்கத்தில் இருவழி போக்குவரத்து

Freelancer   / 2025 மே 08 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு ரயில் மார்க்கத்தின் பொல்கஹவெல மற்றும் மஹவ ரயில் நிலையத்திற்கு இடையிலான மார்க்கத்தை இருவழி போக்குவரத்தாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டத்தின் கீழ் பொல்கஹவெல மற்றும் குருணாகல் ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் மார்க்கத்தை இருவழி மார்க்கமாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

ரயில் போக்குவரத்து தாமதத்தை குறைக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X