2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘வடக்கின் நீர் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அவசியம்’

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மக்களின் வறுமை நிலை அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக விளங்கும், நீர் பிரச்சினைக்கு விரைவானத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்துக்கென முன்வைக்கப்பட்டுள்ள நீர் திட்டத்தின் முன்னேற்ற ஆய்வுத் தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீர் வசதியை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பது அவர்களின் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில பிரதேசங்களில்  வௌ்ள  அனர்த்தத்தின் போது  கடலுக்குச் செல்லும் நீரை குழாய் மூலம் வடக்குக்குக் கொண்டுச் செல்வது தொடர்பில் இதற்கு முன்னர் தன்னால் முன்வைக்கப்பட்ட யோசனையை விரைவாக நடைமுறைப்படுத்துவது முக்கியம் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .