2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

’வடக்கில் பத்திரிகை ஒன்று பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது’

Nirosh   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பத்திரிகை ஒன்று பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து இன்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்குமபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த 30 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால், சிவில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கத்தின் காலப் பகுதியில் புலனாய்வுத் துறை பலவீனமாக்கப்பட்டதாலேயே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் நாட்டில் இடம்பெற்றதாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தேசியப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .