2025 ஜூலை 02, புதன்கிழமை

வடக்குக்கான ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது

Editorial   / 2019 நவம்பர் 29 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யா​ழ்தேவி ரயில் தடம்புரண்டமையால் பாதிக்கப்பட்டிருந்த வடக்குக்கான ரயில் சேவைகள், இன்று (29) முதல் வழமைக்குத் திரும்பியுள்ளது.

இன்று காலை, கொழும்பு - கோட்டை முதல் காங்கேசன்துறை வரையான ரயில் சேவை இடம்பெற்றதென, ரயில்வே கட்டுப்பாட்டாளர் வஜிர பொல்வத்த தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயில், நேற்று முன்தினம், அம்பனபொல - கல்கமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புறண்டது.

இதனால், கொழும்பிலிருந்து மஹாவ வரையிலும் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் வரையில், ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .