2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘வடக்குத் தவிர்ந்த 8ஐயும் மொட்டு கைப்பற்றும்’

Editorial   / 2019 ஜனவரி 15 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ், சி.அமிர்தப்பிரியா

 

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கத் தயாரென அறிவித்துள்ள அந்தக் கட்சி, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், வடக்கைத் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாணங்களையும், தமது கட்சி கைப்பற்றுமெனவும் கூறியது.

  பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, மேற்கண்டவாறு தெரிவித்ததோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து, வடக்கு மாகாணசபை பறிப்போகும் எனவும், புதிய அரசமைப்புக் கொண்டுவரப்பட வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில், நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். 

புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதிலிருந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்வாங்குவதாகத் தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைப்பதற்காக, வடக்கில் இனவாதத்தைப் பரப்பி வருவதாகவும் ஆதாரமின்றிக் குற்றஞ்சுமத்தினார். 

மாகாணசபைத் தேர்தலைக் காலந்தாழ்த்துவதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஜனாதிபதியுமே காரணமென்ற போலியான பரப்புரைகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலடி கொடுத்திருப்பதாகவும் கூறிய ரோஹித எம்.பி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்க, ஞாபகமறதி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாகச் சொன்னதோடு, மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் ஒருபோதும் நிராகரித்ததில்லை எனவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .