Freelancer / 2026 ஜனவரி 06 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரகம் கொலனி, படிகாரமடுவ பிரதேசத்தில் உள்ள வீட்டில் இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக தனது வீட்டிற்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்ததுடன், தீயை வைத்த 43 வயதுடைய நபரும் அவரது 13 வயது மகளுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
தீயில் சிக்கிய மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயதுடைய பாட்டி ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளாகி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த மகனால் தாய் மற்றும் இரு சகோதரிகளை மீட்டுள்ளார். இதில் மகனும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியை தாக்கி வந்துள்ளதாகவும், அவர்களுக்கு இடையில் இருந்த தகராறு காரணமாக பல சந்தர்ப்பங்களில் கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இரு தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலலேயே இந்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது. R
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago