2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அதிரடிப் படை பாதுகாப்பு

Freelancer   / 2023 நவம்பர் 20 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் நேற்றையதினம் (19) உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழக்க முன்னர் வழங்கிய மரண வாக்குமூலத்தில் பொலிஸார் செய்த பல சித்திரவதைகள் அம்பலமாகின.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு கருதி சுன்னாகம், மானிப்பாய், இளவாலை, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

உயிரிழந்த இளைஞனுக்கு நீதி வழங்காமல் சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் வெறுமனே இடமாற்றம் வழங்கிவிட்டு பொலிஸார் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.    M

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X