Janu / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் சாவடிக்குள் மது விருந்து நடத்தியதற்காக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கடுவெலயைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு காவலர் திங்கட்கிழமை (29) இரவு கல்கிஸ்ஸை விஜய வீதிக்கு அருகில் உள்ள வீதி தடையில் சேவையில் ஈடுபட்டிருந்த போது, கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் நிலையத்தின் துணை பொலிஸ் பரிசோதகர் அவ்விடத்திற்கு திடீரென சென்ற நிலையில் பணியில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட், சிவில் பாதுகாப்பு காவலர் மற்றும் மற்றொரு நபர் பொலிஸ் சாவடிக்குள் அருந்துவதைக் காண முடிந்துள்ளது.
மேலும் உப பொலிஸ் பரிசோதகர் அந்த நேரத்தில் தனது தொலைபேசியில் குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை தலமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
11 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago