2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

வன்முறைகளால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கான ஒரு மாதிரிச் சேவை

Editorial   / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

  வன்முறை அனுபத்துடன் கூடிய சிறுவர்களுக்கு உதவும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதவுடன் யுனிசெப் நிறுவனத்தினூடாக  ஒரு முன்மாதிரிச் சேவையை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு துவங்கியுள்ளது.

அந்த வகையில்,  ஏதேனுமொரு வன்முறைச் சம்பவம் பொலிஸ் நிலையத்தில், அவசர அழைப்பு எண்ணில் அல்லது வேறு ஏதேனும் ஒரு முறை மூலம் முறைப்பாடு செய்யப்பட்டதிலிருந்து சிறுவர்களை நிலையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகளுடன் சம்பந்தப்படுத்தும் வரையில் அவர்களுக்கு தேவையான சேவைகளை விரைவாகவும், அவர்களின் உணர்வுகளுக்குமதிப்பளித்தும்வழங்குவதேஇந்தபுதியமாதிரியின்நோக்கமாகும்.

 இந்த மாதிரிச் சேவையானது சிறுவர் பாதுகாப்பு மற்றும் நீதித்துறையில் கிராம மற்றும் தேசிய மட்டங்களில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தும் ஆறு முதன்மை முன்னெடுப்புக்களை உள்ளடக்கியுள்ளது.

அந்த வகையில், 1929 உதவி அழைப்பு சேவையை மேம்படுத்துதல், வழக்கு முகாமைத்துவ முறையை அறிமுகப்படுத்துதல், சிறுவர்களுக்கான ஆதரச் சேவைகளை  முன்னேற்றுதல், நீதிச் செயன்முறைகளின் வினைத்திறனை மேம்படுத்துதல், சிறுவர்களிடமிருந்து சான்றுகளை பெற்றுக்கொள்ளும் முறைகளை மேம்படுத்துதல் மற்றும் சிறுவர்களுக்கு சாட்சி அறைகளுடன் சிறுவர் நேய நீதிமன்றங்களை அறிமுகப்படுத்துதல் என பல முன்னேற்றகரமான முன்னெடுப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சங்களாகும். வன்முறையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான மாதிரிச் சேவையின் தொழிற்பாட்டிற்கு  ஐரோப்பிய ஒன்றியம் நீதித்துறைக்கான அனுசரனைத்திட்டத்தினூடாக அனுசரணை வழங்குகின்றது.

 

மேலும், ஒருநாடு என்ற வகையில் நாம் தேசிய மற்றும் சர்வதே கொள்கைகளுடன் எந்தளவு இணங்கியொழுகிறோம் என்பதை புரிந்துகொள்வதற்கு இந்த மாதிரிச் சேவையின் ஆரம்பம் இன்றியமையாத முதன்மை படிமுறையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சேவை மேம்படுத்தல் பணி இலங்கை  தேசிய கொள்கை சட்டகத்தில் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.   பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான மாதிரிச் சேவையின் அறிமுகமானது 2024 ஆம் ஆண்டில் இலங்கை அங்கீகரித்த சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான பொக்டா மாநாட்டின் முக்கிய அர்ப்பணிப்புக்களின் ஒரு பகுதியாகும்.

வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சேவை வழங்கல் தொடர்பான இந்த அணுகுமுறையின் பயனாக சிறுவர்களின் விடயங்களில் கவனம் செலுத்துகின்ற நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு சிறுவர் உரிமைகள், அவர்களின் கண்ணியம் மற்றும் நலன்புரி சேவைகளை பாதுகாத்து முன்னுரிமைப்படுத்தும் விதத்திலும், தரமான சேவைகளை விரைவாக வழங்குவதற்கும் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்றும்,வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான மாதிரிச் சேவைகள் டிஜிட்டல் புத்தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 இந்த மாற்றங்களுக்கு சர்வதேச ரீதியில் நடைமுறைப்படுத்துகின்ற சிறந்த செயன்முறைகள் துணையாக இருப்பதோடு, அவை இலங்கை சிறுவர்கள் வினைத்திறன்மிக்க, தரமான சேவைகள் தொடர்பாக முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு சிறந்த ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தகைய முதலாவது டிஜிட்டல் புத்தாக்கங்கள் கண்டி மேல் நீதிமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சிறுவர்களின் வயதுக்கேற்றவாறு நவீன ஓடியோ மற்றும் காட்சி சார் தொழிநுட்பத்துடன் புதுப்பித்துள்ள சிறுவர் நேய நீதிமன்ற வசதிகள் மூலம் சிறுவர்களுக்கு நீதிமன்ற வளாகத்திலேயே தனியான ஒரு அறையில் சாட்சியமளிப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டுவதுடன், அது குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய திருத்தங்களை (ஜூன் 2025) நடைமுறைப்படுத்துவதாக இருக்கும். இது சிறுவர் சாட்சிகள் குற்றவாளிகளை நேரடியாக எதிர்கொள்வதை தடுப்பதுடன், சிறுவர்கள் மன உளைச்சல் மற்றும் அதிர்ச்சிக்கு ஆளாவதிலிருந்து அவர்களை பாதுகாக்கின்றது.   

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர்   ஹர்ஷன நானாயக்கார   இந்த திருப்புமுனை பற்றி கருத்து தெரிவிக்கும் போது,

“இது இலங்கை நீதித் துறையின் ஒரு திருப்பு முனையாகும். மேலும், சிறுவர்களுக்கு நீதிமன்றங்களில் குரல் கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதையும், அவர்களால் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அவர்களுக்கு நவீன தொழிநுட்பத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் என்றும் இருக்கும் என்பதையும் அவர்கள் கௌரவத்துடன் நடத்தப்படுகின்றனர் என்ற உணர்வையும் இந்த சேவைகள் உறுதிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இது மேல் நீதிமன்றங்களில் சிறுவர்களுக்கான விஷேட நிபுணத்துவம் வாய்ந்த சேவைகளை வழங்குவதற்கான ஒரு முக்கியமான படிமுறையாக இருக்கும்” என தெரிவித்தார்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்  சரோஜா போல்ராஜ் கருத்து தெரிவிக்கையில்,

   “இப்புதிய சேவைகளை தொடங்கி வைப்பதன் மூலம் இலங்கையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பாதுகாக்கும் ஒரு புதிய வழிமுறையை நாம் ஆரம்பிக்கிறோம். ஒருங்கிணைக்கப்பட்ட, பல் துறைசார் அணுகுமுறை கருத்திற்கொள்வதனூடாக சிறுவர்களுக்கு தரமான நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதை நாம் இலக்காக்கொள்வதுடன், அதே நேரத்தில் எங்களுக்கு பாதுகாப்பையும் நலன்புரி சேவைகளையும் பாதுகாப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டும்” என தெரிவித்தார்.  

இலங்கையின் முன்னேற்றத்தை சிறப்பித்துக்கூறி உரையாற்றிய இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்  காரமன் மொரேனோ அவர்கள் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றித்தின் இன்றியமையாத வகிபாகத்தை கோடிட்டுக்காட்டினார். அவர் மேலும்கூறியதாவது:“சிறுவர்களுக்கு எதிரான வன்முறை உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஒரு தீவிரமான பிரச்சினையாக இருந்து வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்(யுனிசெப்)ஆகியவற்றின் கூட்டணியானது, நீதித்துறைக்கான அனுசரனைத்திட்டத்தினூடாக(JURE), இலங்கை அரசாங்கத்தின் சிறுவர்களுக்கு எதிரான வன் முறையை முடிவுக்கு கொண்டுவரும் உறுதிமொழியை செயன் முறைக்குக் கொண்டு வருவதில் முக்கியபங்கு வகித்துள்ளது. இன்றையதினம், சிறுவர்-நேய​சேவைகளின் ஒருமாதிரியை நடைமுறைப்படுத்துகிறது; இது வன்முறைக்கு இலக்கான சிறுவர்களுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்குவதோடு, அவர்களுக்கு நீதியையும் பெற்றுத்தரும்”.

இத்தகைய ஒன்றிணைந்த நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி உரையாற்றிய யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிகம், “இன்று இலங்கை சிறுவர்கள் தொடர்பான சர்வதேசக் கொள்கைகளை சாத்தியமாக்குகின்றது. பாதுகாப்பு மற்றும் நீதியை ஒன்றிணைக்கும் முழுமையான, ஒருங்கிணைந்த மற்றும் சிறுவர் மையமுறைமை சிறுவர்கள்பாதுகாக்கப்பட்டுள்ளார் என்பதையும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கும் தேவையான ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போது கிடைக்கும் என்பதையும் வலியுறுத்துகின்றது. எனவே, நாம் இந்த மறுசீரமைப்பு அணுகுமுறையை மனப்பூர்வமாக வரவேற்பதுடன், இந்த சேவைகளை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளோம் என்றும் தெரிவித்தார்

இலங்கை அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனிசெப் நிறுவனம் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து சிறுவர்களின் பாதுகாப்பு  உரிமை உறுதிப்படுத்துவதற்கு தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை வலியுறுத்துகின்றனர்.

நீதித்துறைக்கான அனுசரணைத் திட்டம் என்பது ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டம் (UNDP) ஆகிய  இரு நிறுவனங்களால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் நீதி அமைச்சின் கூட்டொத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஒரு செயற்திட்டமாகும். நீதித்துறையை அனைவருக்கும் இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும், வினைத்திறன்மிக்கதாகவும் பலப்படுத்துவதே அதன் இலக்காகும். ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் சிறுவர் நேய நீதி மற்றும் சிறுவர் பாதுகாப்புச் செயன்முறைகளை மேம்படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வதுடன், சட்ட முறைமையில் சிறுவர்களுக்கு சிறந்த பாதுகாப்பும் ஆதரவும் கிடைப்பதையும் உறுதிப்படுத்த முயற்சிக்கின்றது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X