Editorial / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
விலங்குகளை வேட்டையாடுவதற்காக பொறிகளை வைத்தல் மற்றும் வேட்டையாடி இறைச்சிககளை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக, தற்போது நீதிமன்றங்களில் வழங்கப்படும் தண்டனைகளுக்கு மேலதிகமாக தண்டனை வழங்குவதற்கு தேவையான துணைச் சட்டத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைத்து, அனுமதியைப் பெற்றுக்கொள்ளவுதாக, வனஜீவராசிகள் அமைச்சர் சி.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மிருகங்களை வேட்டையாடுவதற்காக வனஜீவ வலயம், வன பாதுகாப்பு பிரதேசங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களை அண்மித்து பொறிகளை வைப்பவர்களை கைது செய்வது தொடர்பில், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களங்கள் இணைந்து வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மித்த சில காலப்பகுதிகளில் பொறிகளில் சிக்கி, அதிகமான மிருகங்கள் உயிரிழந்துள்ளதென்றும் இதனை நிறுத்தவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago