Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வன்னி மாவட்டத்தில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு (டிஎன்ஏ) சார்பில் முன்வைக்கப்பட்ட வேட்பு மனுக்களை நிராகரித்த வன்னி மாவட்ட தேர்தல் அதிகாரியின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த வழக்கின் தீர்ப்பை (காரணங்கள்) நீதிமன்றத்தில் நாளை (23) குறிப்பிடுவதாக அறிவித்தது.
2024 ஓக்டோபர் 14 ஆம் திகதியிட்ட கடிதத்தின் மூலம், பாராளுமன்றத் தேர்தல் சட்டம் பிரிவு 19 (1) (a) இன் கீழ் மற்றும் பிரிவு 15 (4) மற்றும் 15 (5) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளைப் பூர்த்தி செய்யாததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
சனத் விஜேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் சட்டத்தரணிகளான நமிக் நஃபத், ஷெஹானி டி அல்விஸ் மற்றும் சுரநாக பெரேரா ஆகியோருடன் எம்.யு.எம் அலி சப்ரி மனுதாரர்களுக்காகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்காக சட்டத்தரணி யுரேஷா டி சில்வா வும் ஆஜராகியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
24 minute ago
33 minute ago