Editorial / 2025 டிசெம்பர் 11 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

முக்கிய தருணத்தில் சிலர் சமயோசிதமாக செயல்பட்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். அப்படி ஒரு ஓட்டோ டிரைவரின் செயல் சமூக வலைத்தளத்தில் பாராட்டை குவித்து வருகிறது.
கடந்த ஒருவாரமாக இண்டிகோ விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதற்கிடையே மற்ற விமான நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் விமான பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் தனது ஓட்டோவை இண்டிகோ விமானம் போல் மாற்றி அமைத்து கவனம் பெற்றார்.
அவரது ஆட்டோ பலரின் விருப்பங்களை பெற்று கூடுதல் சவாரிகளை பெற்றுக்கொடுத்தது. அவர் ஓட்டோ இயக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியும் வைரலானது. இருந்தாலும், இந்த வீடியோ ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருத்து பதிவிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .