Kanagaraj / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரவு-செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதம் நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில், பகல்போசனத்துக்கு பின்னர் சபை சூடுபிடித்துள்ளது.
முன்னதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச உரையாற்றினார்.
அரசாங்கத்தின், கடந்த கால செயற்பாடுகளை கடுமையாக விமர்சனத்துக்கு உட்படுத்திய அவர், வீதி அபிவிருத்தி எனும் பெயரில் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடியுங்கள் பரவாயில்லை. ஏனெனில், வீதியாவது மிஞ்சும்.
எனினும், பிரதமரின் கீழ் வரவிருக்கின்ற அமைச்சுகளில் அதிகாரிகள், ஊழல் மோசடிகள் இடம்பெற்றால், அரசாங்கத்தின் பணமே நட்டமாக செலுத்தப்படவிருக்கின்றது. அந்த அடிப்படையிலேயே வர்த்தமானி தயாரிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக இன்னும் 5 அல்லது 6 வருடங்களின் பின்னர், வருமானத்தை ஈட்டிக்கொள்ளலாம் என்று சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகளை அவர், அடுக்கிக்கொண்டே போனமையால் குறுக்கிட்ட, ஹெக்டர் அப்புஹாமி எம்.பி, உங்களுடைய மாளிகையில், 24 வயதான இளைஞன் எப்படி இறந்தான் என்று வினவினார்.
அதற்கு பதிலளித்த, விமல் எம்.பி, அந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவைச்சேர்ந்த அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர்.
சுஜீவ சேனசிங்கவுக்கு (இராஜாங்க அமைச்சர்) கையாலே, தலங்கம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய கொள்ளவே இவ்வாறு செய்யப்பட்டது.
இதன் போது குறுக்கிட்ட சர்வதேச வர்த்தக இராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, அந்த இளைஞன் இறந்தானா? அல்லது கொல்லப்பட்டனா? என்று கேட்டார்.
தனதுரையை தொடர்ந்த விமல் வீரவன்ச, எது உண்மை, எது பொய்யென்று தெரியவரும். அமைச்சர் நிமல் சிறி பாலடி சில்வாவும் சிரிக்கிறார். அமைச்சர் ஜோனும் சிரிக்கிறார். இன்னும் சிலர் சிரிக்கின்றனர்.
இந்த அரசாங்கம் நீண்ட நாட்களுக்கு பயணிக்காது என்று தெரிந்துகொண்டுதான் அவர்கள் சிரிக்கின்றனர்.
நல்லாட்சி எனும் பெயரில் நீங்கள் எல்லோரும் கழிவு குழிக்குள் விழுந்துவிட்டீர்கள், தயவு செய்து மக்கள் தூக்கிவிடும் முன்னர் நீங்கள் எழுந்து வாருங்கள் என்று கேட்டுக்கொண்டு தனது உரையை முடித்துகொண்டார்.
அதன் பின்னர் உரையாற்றிய, எம்.பியான நலின் பண்டார ஜயமான, அலைபேசி கடையை வைத்திருந்தவர் இன்று மாளிகையில் வசிப்பது எப்படி?, அந்த மாளிகையில், 24 வயதான இளைஞன் சடலமாக மீட்கப்பட்டமை எப்படி? தனக்கு முடியாததை, அந்த இளைஞனை கொண்டே, நிறைவேற்றியுள்ளார்.அதுவும் வயகரா கொடுத்தே, அதனை நிறைவேற்றியுள்ளீர்கள். வயகரா எப்படி? எப்படி? என்று கேட்டார்.
கள்ள பாஸ்போட் வைத்திருந்த அவ்வாறானவர்களை, அதாவது தும்முல்ல வன்சவுக்கு பின்னர் உரையாற்றுவதையிட்டு நான் பெருமையடைகின்றேன் என்று கூறி தனதுரையை தொடர்ந்தார்.
எனினும், இதனிடையே எழுந்த அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எங்களுடைய தலைவர், அவரே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராவார். அவ்வாறிருக்கையில் நாங்கள் உள்ளே இருக்கவேண்டுமா? அல்லது வெளியே இருக்கவேண்டுமா? என்பதை விமல் வீரவன்ச தீர்மானிக்கமுடியாது என்றார்.
3 minute ago
11 minute ago
13 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
13 minute ago
15 minute ago